இந்த பழக்கங்களை கை விடுங்க.. 50 வயதிலும் இளமையாக ஜொலிக்கலாம்!
பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வயது வர வர உடலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழும்.
இந்த மாற்றங்கள் சிலருக்கு நன்மைகளாகவும், சிலருக்கு தீமையாகவும் மாறி வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றன.
அதிலும் குறிப்பாக, நம்முடைய இளமைக்கால வாழ்க்கை முறை நமது வயதான காலங்களில் பார்க்கலாம்.
எப்போதும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்களை தினமும் வைத்திருக்க வேண்டும். ஆரோக்கியமான பழக்கங்களை வைத்திருப்பவர்கள் இளமையாகவே நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.
அந்த வகையில், நீண்ட நாட்கள் இளமையாக வாழ நினைப்பவர்கள் 50 வயதிற்கு பின்னர் சில பழக்கங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். அப்படியான பழக்கங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. உடற்பயிற்சி
ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் மெதுவாக எழுந்து சிறுசிறு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். தசை ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும் பொழுது உடலின் இயக்கம் குறைய ஆரம்பிக்கும். இதனால் 50 வயதை தாண்டியவர்கள் தினமும் நடைபயிற்சி, யோகா, வலிமை பயிற்சிகள் ஆகியவற்றில் ஆர்வமாக இருக்க வேண்டும். 30 நிமிடங்கள் தொடர்ந்து செய்யும் பொழுது நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
2. புகைப்பிடிக்கும் பழக்கம்
புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களின் சரும ஆரோக்கியம் பாதிக்கப்படும். அத்துடன் அவர்களின் உள்ளுறுப்புகளும் மெது மெதுவாக பாதிப்படைய ஆரம்பிக்கும். உதாரணமாக, கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும், தொடர்ந்து தூங்குபவர்களுக்கு அறிவாற்றல் குறையும், அதிக எடை, இதய பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகள் வர ஆரம்பிக்கிறது.
3. காலை உணவை தவிர்த்தல்.
50 வயதை தாண்டியவர்கள் அவசியம் காலையுணவு சாப்பிட வேண்டும். வயதான காலத்தில் காலை உணவை தவிர்க்கும் பொழுது நோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும். பேக்கரி உணவுகள், அதிகபடியான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் கலக்கப்பட்டிருக்கும் உணவுகள் உள்ளிட்ட உணவுகள் எடையை அதிகரிக்கும்.
இதனை தடுக்க நினைப்பவர்கள் காலையில் எழுந்தவுடன் ஆரோக்கியமான பானமொன்றை எடுத்து கொண்டு, அதன் பின்னர் நல்ல கொழுப்புகள், புரதம், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |