உடலில் கெட்ட கொழுப்பை கரைக்கும் சூப்பர் உணவுகள்
வேகமான வாழ்க்கை முறையின் காரணமாக இப்போது பலரும் தங்களது உணவு பழக்கத்தையும் மாற்றிவிட்டனர்.
தங்களது வேகமான வாழ்க்கையில் துரித உணவுகளையே அதிகம் உண்ணுகின்றனர். குக்கீஸ்கள், மயோனைஸ், கிராக்கர்ஸ் மற்றும் நம்கீன்களில் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடிய உணவு வகைகளை மக்கள் விரும்பி உண்ணுகின்றனர்.
இவ்வாறு ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை சாப்பிடுவதால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயம் அதிகரிக்கிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் இதுபோன்ற உணவுகளை உட்கொள்வது கெட்ட கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கும்.
இதனை குறைக்க உடற்பயிற்சி செய்வதோடு சில காய்கறிகளையும் உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான முறையில் கொலஸ்ட்ராலை குறைக்கலாம்.
அந்த வகையில் கெட்ட கொலஸ்ராலை குறைக்க கூடிய ஏழு வகையான மரக்கறிகளை இப்போது பார்க்கலாம்.
1. முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
இதனை சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது, கெட்ட கொழுப்பை அகற்றி உடலில் உள்ள இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
2.பசலைக் கீரை
பசலை கீரையை நீங்கள் சமைத்தோ அல்லது பச்சையாகவோ உணவில் உங்கள் விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது மற்றும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அகற்ற உதவுகிறது.
3.பாகற்காய்
பாகற்காய் இரத்தத்தை சுத்தப்படுத்தவும், இதய செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. இதனை சாப்பிடுவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கிறது.
4. ப்ரோக்கோலி
இதில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை நல்ல நிலையில் பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிக நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
5.கரட்
கரட் நார்ச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் சத்தின் சிறந்த மூலமாக உள்ளது. கேரட் சாப்பிடுவதால் நமது உடலில் எல்டிஎல் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்கப்படுகிறது.
6.பீட்ரூட்
பீட்ரூட் நார்ச்சத்து நிறைந்த காய்கறி வகையாகும். இது நைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும்.. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்தவும், உடலில் இரத்த அழுத்த அளவைக் குறைக்கவும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.
7.அஸ்பாரகஸ்
இது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாக காண்படுகின்றது.இதில் ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் இதனை சாப்பிடுவதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் நீக்கப்படுகிறது.