தாங்க முடியாத இடுப்பு வலியா? நொடியில் பறக்க விடும் அதிசய பானம்!
இடுப்பு வலி மோசமான பிரச்சனையாகும்.
அதை கண்டுக்கொள்ளாமல் விட்டால் மேலும் மோசமாக வாய்ப்புள்ளது.
சிலருக்கு சாதாரணமாக உட்கார்ந்து எழுந்தாலே இடுப்பு வலி ஏற்படும். இதை பலரும் சாதாரணமாக கடந்துவிடுவார்கள்.
ஆனால் இது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறி. இப்படி இடுப்பு வலிக்கான பொதுவான காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
ஏன் முதுகு வலி ஏற்படுகின்றது?
எலும்புகளுக்கு இடையே உள்ள குருத்தெலும்பு சேதமடையும் போது, இடுப்பு வலி தொடங்குகிறது.
இது நிகழும்போது, சில நேரங்களில் பாதங்களில் கடுமையான வலி ஏற்படலாம். பல சமயங்களில், உட்கார்ந்து எழும் போது, கடுமையான வலியை உண்டாக்கும்.
அதே போல நாம் அமரும் விதம் இடுப்பு வலிக்கு முக்கிய காரணம்.
இடுப்பு மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதால் வலி பிரச்சினை ஏற்படுகின்றது.
வலியை நொடியில் பறக்க செய்யும் சுக்கு டீ
சுக்கு டீ
- சுக்கு – 1 கிராம்
- மிளகு – 5
- கிராம்பு – 5
- கொள்ளு – ஒரு ஸ்பூன்
- டீ தூள் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – ஒரு கிளாஸ்
- பனைவெல்லம் – தேவைக்கேற்ப
சுக்கு டீ செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொத்தித்த பிறகு டீ தூள் சேர்க்க வேண்டும்.
டீ தூள் சேர்த்த பிறகு மேல் கூறப்பட்டுள்ள சுக்கு, மிளகு, கிராம்பு, கொள்ளு ஆகியவற்றை சேர்க்கவும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 நிமிடங்கள் டீயை கொதிக்க விடுங்கள்.
பின்பு அதனுடன் தேவையான அளவு பனைவெல்லம் கலந்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் அருந்தி வாருங்கள்.
இவ்வாறு அருந்தி வருவதினால் இடுப்பு வலி பறந்து ஓடிவிடும்.