வயிற்றில் குழந்தையுடன் தவறி விழுந்த தனம்: மீனாவால் ஏற்பட்ட பிரச்சனை- அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அண்ணன்- தம்பிகள் நால்வரை மையமாக கொண்டு குடும்ப பாங்கான திரைக்கதையுடன் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். மூத்த அண்ணி தனம் குடும்பத்தின் மீது அக்கறையாக, தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.
தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் சூழலில், கண்ணும் கருத்துமாக குடும்பத்தினர் அவரை கவனித்து வருகின்றனர். ஆனால் மீனாவுக்கோ, தனத்தின் மீது பயங்கர கோபம், அவருக்கு மட்டும் மரியாதை அதிகம் கிடைப்பதாக பொறாமையில் இருக்கிறார்.

நேற்றைய எபிசோட்டில், வாஷிங் மெஷினில் துணிகளை துவைப்பதற்காக போடுகிறார் மீனா, அழுக்கு தண்ணீர் செல்வதாக டியூப்பை அப்படியே போட்டு விட, முல்லை ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்கிறார். அதற்கு மீனாவோ, நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும்? நீங்கள் ஒன்றும் அதிகாரம் செய்ய வேண்டாம் என்கிறார்.
கடைசியில் சோப்பு நுரை தண்ணீரில் தனம் வழுக்கி விழ, அவரது வயிற்றில் அடிபடுகிறது, வலியில் தனம் அலற, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!!