எச்சரிக்கை... குழந்தையின் கண்களில் மை வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
குழந்தையின் கண்களில் கண்மை வைப்பது ஒரு பாரம்பரிய தமிழ் கலாச்சாரமாகும்.
இது தீய கண்களை தடுக்கும் என்று நம்பப்படுகிறது. பல இந்திய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை பெரிதாகவும் அழகாகவும் காட்ட கண்மை பயன்படுத்துகின்றனர்.
மூத்த முந்தைய தலைமுறையினர் குழந்தைக்கு தேவையானவற்றைக் கூடுமான வரை அவர்களாகவே தயாரித்து பயன்படுத்தினார்கள்.
பருத்தி துணியில் செய்யப்படும் லங்கோட்டாக்கள், உரை மருந்துகள், மசாஜ் செய்ய செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் இவற்றுக்கு மத்தியில் கண் ணுக்கு வைக்க கூடிய கண் மைகளையும் தயாரித்தார்கள்.
குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?
தற்போது எல்லாமே மாறிவிட்டது. கடைகளில் விற்கப்படும் கண்மையில் அதிக அளவு லெட் இருப்பதால் குழந்தையின் கண்களிலும், எலும்பு, மூளை பகுதியிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது.
கண்மை தயாரிக்கப் பயன்படும் பொருள்களில் ரசாயனத் தன்மை கலந்திருப்பதால் சில குழந்தை களுக்கு கண் மை அரிப்பு, கண்களில் நீர் வடிதல், கண்ணில் அலர்ஜி போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு.
எச்சரிக்கை
மேலும் விரல் இடுக்குகளில் இருக்கும் தூசு, அழுக்கு போன்றவற்றாலும் தொற்றுப் பரவ நேரிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தப்படும் கண் மை எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது.
அதைத் தயாரிப்பதும் எளிதானதே.