நாய்க்கு நடந்த வளைகாப்பு! 9 உணவுகளுடன் வைக்கப்பட்ட விருந்து
வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தியுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாய்க்கு நடந்த வளைகாப்பு
இன்று பெரும்பாலான மக்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை தங்கள் வீட்டு குழந்தைகள் போன்று பல நிகழ்வுகளை செய்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் செல்ல நாய்க்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதாகும். சமீப காலமாக நாய்க்கு வளைகாப்பு செய்யும் நிகழ்வுகளை நாம் அதிகமாகவே காண்கிறோம்.
இங்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்(35). கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவர், தனது மனவைி தேன்மொழியுடன் வசித்து வருகின்றார்.
இந்த தம்பதிகள் தங்களது வீட்டில் ஆண் மற்றும் பெண் நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர். ஆண் நாய்க்கு பைரவன் என்றும், பெண் நாய்க்கு பைரவி என்றும் பெயர்சூட்டிய நிலையில், பைரவி கர்ப்பமாக இருந்துள்ளது.
இந்நிலையில் தங்களது செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்ட இந்த தம்பதி, நாய்க்கு புத்தாடை, வளையல், சந்தனம், குங்குமம் ஆகியவை அணிவித்ததுடன், தலைவாழை இலையில் ஒன்பது வகையான உணவுகளையும் விருந்து வைத்துள்ளனர்.
விழாவிற்கு வந்த விருந்தினர்கள் மொய்பணம் கொடுத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.