செல்ல நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த பெண்! மில்லியன் இதயங்களை வென்ற காட்சி
நாய், பூனை உட்பட வீட்டு விலங்குகளை பலரும் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருவார்கள்.
குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போன்றே பழகும் செல்லப்பிராணிகளின் பாசத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
ஒருசில நேரங்களில் மனிதர்களையே மிஞ்சும் அளவுக்கு புத்திக்கூர்மையுடன் செயல்படும்.
அப்படி பாசமான நாய்களுக்கு பலரும் பிறந்தநாள் கொண்டாடி பார்த்திருப்போம்.
நாய்க்கு வளைகாப்பு
ஆனால் தன்னுடைய நாய்க்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார் Sujatha Bharathi.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று வருகிறது.
Baby shower for my cutie என்று தலைப்பிட்டு வெளியிடப்பட்ட அந்த வீடியோவை பலரும் ரசிக்கின்றனர்.
அழகாக சால்வை போர்த்தப்பட்டு அமர்ந்துள்ள நாய்க்கு மாலை அணிவித்து, நெற்றியில் மஞ்சள்- குங்குமம் வைத்து வளையல் அணிவித்துவிடுகிறார்.
கடைசியாக விதவிதமான சாப்பாட்டுடன் தெருவில் உள்ள நாய்களுக்கும் உணவளிக்கிறார்.