என்னமா பாடுறீங்க.. அம்மாவின் தாலாட்டிற்கு மெய்மறந்து போன குட்டிகுழந்தை - வைரல் வீடியோ
அம்மாவின் குரலை கேட்க முடியாவிட்டாலும் அவரின் அசைவுகளை இரசிக்கும் குழந்தையின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை மகிழ்வடைய வைத்துள்ளது.
சுட்டி குழந்தைகளின் அசைவுகள்
பொதுவாக வீடுகளில் குழந்தை பிறந்தவுடன் அவரிடம் நாம் பேசும் போது அவர்களுக்கு அந்த மொழி தெரியாவிட்டாலும் நமது அசைவுகளை அவர்கள் இரசிப்பார்கள்.
மேலும் அவர்களிடம் நாம் பேசிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் 1 வயது கிட்ட வரும் போது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகளை பேசுவார்கள்.
அந்த வகையில், சுமார் 2 மாதக்குழந்தையொன்று அம்மாவின் தாலாட்டை கண்டு இரசிக்கிறது.
ஆனால் குறித்த குழந்தைக்கு தாய் பாடும் பாடல் புரியவிட்டாலும் அவரின் வாய் அசைவை நன்றாக கவனித்து கொண்டிருக்கிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், குழந்தையின் அசைவிற்கு மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.