Viral Video: ரஞ்சிதமே ஸ்டைலில் கியூட் ரியாக்ஷன் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியல் நிலா
ரஞ்சிதமே ஸ்டைலில் முத்தம் கொடுக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் குழந்தையின் வீடியோக்காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
சின்னத்திரையில் 'ராஜா ராணி' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமாகியவர் தான் நடிகை ரித்திகா. அந்த சீரியலில் இவருக்கு பெரியளவில் முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் பெரியளவில் ரித்திகாவிற்கு வரவேற்பு இல்லை.
இதனை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் பல விமர்சனங்களுக்கு மத்தியில் எழிலுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நகர்த்தப்படுவதால் ரித்திகாவிற்கு அதிக சீன்கள் வைக்கப்பட்டுள்ளது.
சீரியலில் நடித்துக் கொண்டே “குக் வித் கோமாளி”என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார்.
இந்த நிலையில் ரித்திகா விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் ஒரு கோயிலில் எளிமையாக தான் இடம்பெற்றது.
அமிர்தாவுடன் இணைந்து நடிக்கும் நிலா பாப்பா
தொடர்ந்து தற்போது டாப் சீரியல்களில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவிற்கு குழந்தையாக நடிக்கும் நிலா என்ற குழந்தையும் நடிப்பில் கலக்கி வருகிறது.
நாட்கள் செல்ல செல்ல நிலா பாப்பாவிற்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன் அசைவு முகப்பாவனை என அனைத்தும் அமிர்தாவிற்கு ஏற்று இருப்பதால் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இதன்படி, விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படத்தில் வரும் “ரஞ்சிதமே” என்ற பாடலுக்கு விஜய் கொடுக்கும் ஆக்ஷனை நிலா பாப்பா செட்டில் அனைவருக்கும் அழகாக செய்து காட்டியுள்ளது.
இந்த ரியாக்ஷன் செட்டிலுள்ள அனைவரையும் ஈர்த்ததுடன், இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, மேலும்,“ என்னம்மா ரியாக்ஷன் கொடுக்குது இந்த குட்டி பாப்பா” என கமண்ட் செய்து வருகிறார்கள்.