எதிர்வரும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இவ்வளவு சக்தியா?
எதிர்வரும் சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதாரண மனிதர்களை விட சில சக்திகள் அதிகமாக இருக்கும் என ஜோதிடம் கூறுகின்றது.
சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகள்
கிரகண நேரத்தில் பிறந்தவர்கள் சாதாரண மனிதர்களை விட வித்தியாசமான சக்திகளைக் கொண்டிருப்பார்கள். இந்த சந்திர கிரகணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிற மக்களை கவரும் திறன் மற்றும் வேறு ஆற்றல் அதிகமாக இருக்குமாம்.
சந்திர கிரகணம் எனும் நாள் மிகவும் புனிதமான நாள். ஜோதிட சாஸ்திரத்தில் சந்திர சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகண நாளை மிக வலிமையான நாளாக கருதுகிறார்கள்.
அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் சாதாரணமாக இல்லாமல், வித்தியாசமான சக்திகளை பெற்று பிறப்பார்கள் என்று பல ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
இவர்களின் மன உறுதி, தீவிர சிந்தனை, புதுமையான யோசனைகள், முடிவெடுக்கும் திறன் எல்லாம் மற்றவர்களைவிட இவர்கள் சிறந்தவர்கள்.
என்னென்ன சக்தி
வெற்றிக்கு மீது வெற்றி - சந்திர கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உணர்ச்சி மற்றும் சிந்தனையில் வலிமை கிடைக்கும்.
பேசும் திறன் மற்றும் சிந்தனையால் மக்களை கவர்ந்து தலைவராக உயர்ந்து முன்னேறுத் திறன் இவர்களிடம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையின் சவால்களை எதிர்த்து போராடுவதில் கில்லாடிகள்.
இவர்களிடம் நேர்மை இருக்கும் ஆனால் கெட்டவர்களுக்கு கெட்டவர்களாக இருப்பார்கள்.
நன்மைக்கு நன்மையாக இருப்பார்கள். வாழ்க்கையில் கஷ்டம் வராது அப்படியே கஷ்டம் வந்தால் கஷ்டத்திற்கு பயம் வரும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவார்கள்.
எந்த ராசி குழந்தைகள் அதிக நன்மை? - குறிப்பிட்ட ராசிகளுக்கு கிரகணப் பிறப்பு மிகுந்த சக்தியையும் ராஜ வாழ்க்கையையும் தரும் என்று சொல்லப்படுகிறது.
சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிகளில் கிரகணப் பிறப்பு கிடைத்தால் அவர்கள் சமூகத்தில் ஒரு தலைவராக, கலைஞராக, அரசியல் தலைவராக, அல்லது பெரிய தொழிலதிபராக உயர்வது நிச்சயம்.
இவர்களின் சொல் எடுக்கும், செயல் வெற்றி பெறும், பாராட்டு எளிதில் வரும். கிரகணப் பிறந்தவர்கள் தவறாமல் ஆன்மிகம், தியானம், தெய்வ வழிபாடு செய்து சக்தியை நல்ல திசைக்கு கொண்டு வர வேண்டும்.
கிரகணப் பிறந்தவர்கள் சாதாரணமாக பிறந்தவர்கள் அல்ல. அவர்களுக்குள் ஒரு ராஜ யோகம் மறைந்து இருக்கும். அதை ஆன்மீக வழியில் சென்றால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |