ஆற்றில் தவறி விழுந்த குழந்தை!! அடுத்த நடந்த திக் திக் நிமிடங்கள்
தமிழகத்தின் குன்னூரில் 300 மீட்டர் தூரம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர். சுறா குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மாதேஸ்வரன்- மணிமேகலை. இவர்களது குழந்தை சேன்விஸ்ரீ(வயது 1 1/2).
இன்று காலை குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளது, இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், 300 மீட்டர் தூரம் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை மீட்டனர்.
சுயநினைவின்றி இருந்த குழந்தையை, தீயணைப்பு துறையினர், சி.பி.ஆர்., எனும் நுரையீரல் இதய உயிர்ப்பித்தல் முதலுதவியை அளித்ததால், சுயநினைவு திரும்பி அழ ஆரம்பித்தது.
தொடர்ந்து, குழந்தையை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முழு உடல் பரிசோதனையும் செய்ததனர், குழந்தையை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.