baby potato fry: அசத்தல் சுவையில் மொறு மொறு பேபி உருளைக்கிழங்கு வறுவல்..
கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு இந்திய உணவுகளில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க கூடியதாக இருப்பது அதன் சிறப்பம்சமாகும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு சைவ உணவாக உருளைக்கிழங்கை குறிப்பிட முடியும்.
பேபி உருளைக்கிழங்கு என அழைக்கப்படும் குட்டி உருளைக்கிழங்கில் அசத்தல் சுவையில் எவ்வாறு வறுவல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பேபி உருளைக்கிழங்கு - 10
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் - 1 தே.கரண்டி
கொத்தமல்லி தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
சீரகம் - 1 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ½ மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக வறுத்து தனியான எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதற்கிடையில், வெங்காயம் மற்றும் தக்காளியை தனியாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடுடாகியதும் சீரகத்தூள் சேர்த்து வதக்கி வெங்காய விழுதை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதன் பின்னர் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது தக்காளி விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
முழு கலவையையும் கலந்து நன்றாக வறுப்பட வேண்டும். அதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர் முன்பு வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அத்துடன் சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் பேபி உருளைக்கிழங்கில் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |