பாம்பின் நாக்கை பிடிக்க முயற்சி செய்யும் சிறுமி.. பீதி கிளம்பும் காட்சி
பாம்பின் நாக்கை பிடிக்க முயற்சிக்கும் சிறுமியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தற்போது சமூக வலைத்தளங்களில் வரையறையில்லாமல் காணொளிகள் வைரலாகி வருகின்றன.
குழந்தைகள் செய்யும் அனைத்து விடயங்களையும் விளையாட்டாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர். சிலர் வாழ்க்கையில் இது விளையாட்டாக இருக்கலாம்.
ஆனால் தற்போது பெரியவர்களை விட சிறு பிள்ளைகள் தான் அதிகமாக தொலைபேசி பார்க்கிறார்கள். காணொளியை பார்த்து குழந்தைகளும் சில தவறான செயல்களை செய்ய முனைகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பதிவேற்றும் ஒவ்வொரு பயனருக்கும் சமூக பொறுப்பு அவசியம் இருக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
இப்படியொரு காணொளி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடுங்க வைக்கும் காணொளி
இதன்படி, சுமாராக 2 வயது மதிக்கதக்க சிறுமியொருவர் அமர்ந்திருக்கும் பக்கத்திற்கு வரும் பாம்பை தன்னுடைய இரு கைகளால் பிடித்து இழுத்து விளைகிறார்.
பாம்பும் எவ்வளவு முயற்சி செய்து தப்பித்தாலும் அதனை ஒரு வழி பார்க்காமல் அந்த சிறுமி விடமாட்டார் போல் உள்ளது.
பாம்பை பிடித்தவுடன் பாம்பின் நாக்கு வெளியில் வருகிறது. அதனையும் குறித்த சிறுமி பிடிக்க பார்க்கிறார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காணொளியை பார்த்த இணையவாசிகள்,“ குழந்தையிடம் கொடிவிஷம் கொண்ட உயிரினங்களை விடுவது கவனம். விளையாட்டு ஒரு நாள் வினையாகலாம்..” என கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |