நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் பாசமாக முத்தமிட்ட ஒராங்குட்டான் குட்டி! பல இதயங்களை நெகிழ வைத்த காட்சி
இங்கிலாந்தில் அமைத்துள்ள ஒரு வனவிலங்கு பூங்காவை பார்வையிட வந்த கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் கண்ணாடி சுவர் வழியாக ஒரு குழந்தை ஒராங்குட்டான் மீண்டும் மீண்டும் முத்தமிட்ட சம்பவம் மனதை நெகிழவைக்கப்பதாக உள்ளது.
இந்த செயலால் மனம் குளிர்ந்து போன கர்ப்பிணி தாய் கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள க்ளூசெஸ்டர் நகரில் வசிப்பவர் தான் நவோமி டேவிஸ் என்கிற பெண்மணி.
இவருக்கு தற்போது வயது 34. இவர் லெய்செஸ்டர்ஷையரில் உள்ள ட்வைக்ராஸ் வனவிலங்கு பூங்காவிற்கு அடிக்கடி செல்வது வழக்கம். ஆனால் அவரது சமீபத்திய விசிட் அவரை உணர்ச்சிவசப்படுத்தியது.
வருங்கால கணவர் பென் பில்லிங்காமுடன் கடந்த 2019ம் ஆண்டு அந்த பூங்காவிற்கு நவோமி சென்றபோது , ஒராங்குட்டான் அடைத்துவைக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, கண்ணாடி திரைக்கு அருகில் இருந்த ஒரு குரங்கிற்கு எதிராக நின்று கொண்டார். அப்போது ஒரு குட்டி ஒராங்குட்டான் குரங்கு வயது முதிர்ந்த குரங்கின் முதுகில் ஏறி கண்ணாடி கதவு வழியாக அவரது வயிற்றில் முத்தமிட ஆரம்பித்தபோது நவோமி மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக டெய்லி மெயிலில் வெளியான அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் நடந்தபோது நவோமி நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
குழந்தை ஒராங்குட்டானுக்கு கர்ப்பிணியின் பேபி பம்ப்-ஐ வெளிப்படுத்த வேண்டும் என நவோமியின் வருங்கால கணவர் ஊக்குவித்தார்.
நவோமி ஒரு நர்சிங் உதவியாளர் ஆவார். அவருடைய வருங்கால கணவர் துணைப் பணியாளராக இருக்கிறார். நவோமியின் பம்ப் மிகவும் சிறியதாக இருந்ததால், குழந்தை ஒராங்குட்டானுக்கு தனது கர்ப்பம் பற்றி தெரியாது என்று முதலில் நினைத்து கொண்டிருந்ததாக நவோமி கூறினார்.
பின்னர் குட்டி குரங்கு முத்தமிட்டதை கண்டவுடன் நெகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
, இந்த வீடியோ இணையத்தில் பலரின் இதயத்தை வென்று வருகிறது.