viral video: குழந்தைக்கு பல்லியை கொடுத்த தந்தை - சிறுமி செய்த வேலை பாருங்க
ஒரு வைரல் காணொளியில், ஒரு தந்தை தனது இரண்டு வயது மகளுக்கு ஒரு பல்லி குட்டியைக் கொடுக்கிறார். பின் அந்த சிறுமி செய்த வேலை தற்போது வைரலாகி வருகின்றது.
வைரல் காணொளி
பல்லிகள் என்றால் பலருக்கும் பயம். அது கடிக்காத உயிரினமாக இருந்தாலும் அதற்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயம் தான்.
தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் ஒரு தந்தை தனது இரண்டு வயது மகளுக்கு ஒரு பல்லி குட்டியைக் கொடுக்கிறார். இது அனேமான பெற்றோர்கள் செய்ய மாட்டார்கள்.
ஆனால் இந்த தந்தை செய்தார். பல்லி காலில் மிதிக்க கூடாது என எடுத்த தந்தை அதை தன் மகளிடம் கொடுத்ததும் அதை அவர் மகள் வாங்கி பதட்டமடையவோ கத்தவோ இல்லை.
அதற்கு பதிலாக, அந்தச் சிறுமி பல்லியின் தலையை மெதுவாகத் தடவி, அதை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாமா என்று தன் தந்தையிடம் கேட்கிறார்.
அப்போது தந்தை அதை வைத்து என்ன செய்வாய் என்று கேட்டபோது, அதன் அருகில் தூங்குவேன் என கூறுகிறார். பின் சிறுமி அந்த பல்லியின் தாய் எங்கே என தேட ஆரம்பித்தாள். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |