26 விரல்களுடன் பிறந்த குழந்தை... தேவியின் அவதாரமாக பார்க்கும் மக்கள்
ராஜஸ்தான் மாநிலத்தில் 26 விரல்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குடும்பத்தினர் தேவியின் அவதாரம் என்று கூறி வருகின்றனர்.
26 விரல்களுடன் பிறந்த குழந்தை
ராஜஸ்தானில் பரத்பூரில் சர்ஜு தேவி என்ற பெண் சமீபத்தில் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது 26 விரல்களுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையை குடும்பத்தினர் தெய்வ அவதாரம் என்று அழைத்து வருகின்றனர்.
ஒவ்வொரு கையிலும் எழு விரல்கள் மற்றும் ஒவ்வொரு காலிலும் ஆறு விரல்களுடன் பிறந்துள்ளது. ஆனால் இவை மரபணு கோளாறு என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
குறித்த குழந்தை எந்தவொரு ஆரோக்கிய குறைபாடும் இல்லாமல் நன்றாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர் பி.எஸ் சோனி இதுகுறித்து பேசிய போது "26 விரல்கள் இருப்பதில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை ஆனால் இது ஒரு மரபணு கோளாறு. சிறுமி முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
மேலும் குழந்தையின் உறவினர்கள் தோலகர் தேவியின் அவதாரம் என்று கூறிவரும் நிலையில், மகிழ்ச்சியுடனும் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |