பிறந்த சில நொடியில் விழுந்து விழுந்து எழுந்து நடக்கும் குட்டி யானை! கோடி ரூபாய் கொடுத்தாலும் காணக்கிடைக்காத மிக அரிய காட்சி
பிறந்த யானை குட்டி முதல் தடவை எழுந்து நடக்கும் அரிய காணொளி ஒன்று மில்லியன் கணக்கான பார்வையாளரின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. இந்திய வனத்துறையில் பணியாற்றும் சுஷாந்தா நந்தா என்ற அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்,“ஆயிரம் மைல்கள் பயணிப்பதற்கான முதல் அடி தொடங்கியுள்ளது. இந்தக் குட்டி யானை எழுந்து நிற்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பிடித்தது.
The first step to a thousand miles?
— Susanta Nanda IFS (@susantananda3) February 15, 2021
Shared pic.twitter.com/TiI1PBSm6J
மேலும் இது மெதுவாக எழுந்து வாத்து நடை போட சில மணி நேரங்கள் தேவைப்பட்டன. பிறக்கும் போது குட்டி யானை மூன்று அடி அளவு உயரம் இருக்கும்.
இவற்றின் பிறப்பு 99 சதவீதம் இரவில் மட்டுமே நடக்கின்றன” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூகவலைத்தள வாசிகள் அற்புதமாக உள்ளது என்று கூறி வருகின்றனர்.