மின்வேலியை கடக்க திணறிய குட்டி யானை! பிள்ளைக்கு வலிக்கும் என கதறிய மக்கள்
கோவை அருகே குட்டி யானையை மின் கம்பியில் இருந்து லாவகரமாக தாய் அழைத்து சென்ற வீடியோ காட்சி இணையத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.
குப்பேபாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டத்தை வனத்துறையினர் விரட்டி வந்த போது, அவை பரமேஸ்வரன் பாளையத்தில் உள்ள ஆனந்தன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்தன.
அங்கு மின் வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வழியாக வர வேண்டாம் என்று கூடியிருந்த மக்கள் கூச்சலிட்டனர்.
அந்த கூட்டத்தில் இருந்த குட்டி யானை மின் வேலியைத் தொட்டு பயந்த நிலையில், அதன் பெற்றோர் யானை பாதுகாப்பாக தனது குட்டியை அழைத்துச் சென்ற காட்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளன.
யானைகள் மின்வேலியை கடந்து செல்லும் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், குட்டியானை வேலியில் சிக்கும் போது அருகே அவதானித்த பெண் ஒருவர் தனது பிள்ளையைப் போன்று சாமி வலிக்கப் போகுது பார்த்து போங்க... என்று அனுதாபப்பட்டுள்ளார்.
வாந்தியை சுத்தம் செய்த கே.ஜி.எஃப் பிரபலம்! வார்த்தையால் கூற முடியாத கஷ்டம்