ஆடுக்குட்டிக்கு பிரசவம் பார்த்த குழந்தை! அடுத்தடுத்து வெளிவந்த 3 குட்டிகள் : 5 மில்லியன் பேரை மிரள வைத்த காட்சி
சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் ஆட்டுக்கு பிரசவம் பார்க்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 2 குட்டிகள் ஈன்ற ஆடு, தனது 3வது குட்டியை பெற கஷ்டப்பட்டு கொண்டிருந்த சமயத்தில், இந்த குழந்தை தானாக முன்வந்து ஆட்டுக்கு உதவுகின்றார். அந்த சிறுமி குட்டியின் கால் மட்டும் வெளியே தெரிவதை கண்டு காலை வெளியே இழுத்து பிரசவம் பார்த்துள்ளது.
The youngest veterinarian I've ever seen! ?pic.twitter.com/DbpWHQ5a4O
— Figen.. (@TheFigen) February 7, 2021
குட்டியை வெளியே எடுத்தவுடன் அதன் வாயில் உள்ள கசடுகளை எடுத்து விடுவார்கள் இல்லையா. அதே போல இந்த குழந்தையும் குட்டியின் வாயில் உள்ள கசடுகளை எடுத்துவிட்டு அதை அதன் அம்மாவிடம் ஒப்படைத்தது.
இந்த வீடியோ 5 இலட்சம் பார்வைகளுக்கு கடந்து சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.