குழந்தையின் அழுகையை நிறுத்த தவியாய் தவிர்க்கீறீர்களா? இதோ டிப்ஸ்
பொதுவாக பிறந்த குழந்தைகள் எதற்காக அழுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வது பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு சவாலாகவே இருக்கும்.
தாய்மார்களுக்கு குழந்தையின் அழுகையை நிறுத்துவது என்பது பெரும் சவாலான காரியமே. இந்நிலையில் வெளியே செல்லும் போது கூட குழந்தைகள் அழுவதால் தாய்மார்கள் கையாள்வதில் சிரமத்தை மேற்கொள்கின்றனர்.
இங்கு குழந்தைகள் எதற்காக அழுகின்றனர் என்பதை சில டிப்ஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் எதற்காக அழுகின்றனர்?
பொதுவாக பிறந்த குழந்தைகள் ஆறு வாரங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் அழுவது இயல்பான ஒன்று.
குழுந்தைகளுக்கு உடல் பிரச்சினையை கூட தெரியாது என்பதால் ஏதெனும் உடல் பிரச்சினை என்றாலும் அழும்.
பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயு தொல்லை, சிறுநீர் கழித்ததில் ஏற்படும் ஈரம், அதிக குளிர்ச்சி, வெப்பம் இந்த காரணங்களால் பெரும்பாலும் குழந்தைகள் அழுகின்றனர்.
எனவே குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கண்டுபிடித்து அதனை உடனடியாக சரி செய்தால் குழந்தையின் அழுகை உடனே நின்று விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |