குழந்தைகளை வைத்திருப்பவரா நீங்கள்? மழைக்காலங்களில் நோயிலிருந்து தப்பிக்க இதை முதல்ல செய்ங்க
மழைக்காலங்கள் என்று வந்துவிட்டாலே நோய்களும் வரிசையாக வந்தவிடும். இவ்வாறு பரவும் நோய்களிலிலிருந்து நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடுமையான வெப்பத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு மழைக்காலம் தேவைப்படுகின்றது. ஆனால் இந்த மழையின் ஈரத்தின் காரணமாக அழுக்குகள் மட்டுமின்றி கிருமிகளிடமிருந்தும் பத்திரமாக இருக்க வேண்டும்.
மழைப்பருத்தில் காற்று, மிகவும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வீடுகளினுள் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் பரவ வழிசெய்கிறது.
குறிப்பாக பிறந்த குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றது. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் பெற்றோர் குழந்தைகளை தொடுவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவிவிட்டு உள்ளே செல்லவும்.

மழைக்காலங்களில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குழந்தைகளை சற்று விலக்கி வைப்பது மிகவும் நல்லது.
அதே போன்று மழை வருவதற்கு முன்பு வீட்டில் தண்ணீர் கசியும் பகுதிகளை சரி செய்து வைத்துக்கொள்ள வெண்டும்.
கெமிக்கல் நிறைந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தாமல் மாலை 6 மணிக்கு முன்பே கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு கொசுக்களை முடிந்தவரை அறைக்குள் வராதவாறு பாதுகாக்கவும்.
குழந்தைகளுக்கு சிறுது உடல்நலங்களில் பிரச்சினை ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
மழைக்காலங்களில் குழந்தைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மேலும் சரும பராமரிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தவும்.
குழந்தைகளுக்கு காட்டன் உடைகளை அணிவதோடு, இரவு நேரங்களில் தலைமுதல் கால் வரை மூடும் வகையில் மென்மையான ஆடைகளை பயன்படுத்துவதை மறந்துவிடாதீர்கள்.
குழந்தைகளின் ஆடைகளை கண்டிப்பாக இரண்டு அல்லது 3 மணி நேரம் சூர்ய ஒளியில் உலர்த்துவதற்கு மறந்துவிட வேண்டாம். நோயின் தாக்கம் ஈரமான ஆடையிலிருந்தே ஆரம்பமாகும்.

அதே போன்று குழந்தைகளுக்கு டயப்பரிலிருந்து சிறிது இடைவெளி கொடுக்க வேண்டும். எப்பொழுதும் டயப்பர் பயன்படுத்திக்கொண்டே இருந்தால் சில தருணங்களில் அலர்ஜியும் ஏற்படும் என்பதை மறக்க வேண்டாம்.
அறையின் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாகவும், வெப்பமாகவும் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர் அதிகமாக இருப்பதை உணர்ந்தால் கூடுதலாக பெட்ஷீட் போர்த்தி தூங்க வைக்கவும்.
குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த தண்ணீர் மிகவும் முக்கியம். மேலும் வைட்டமின் பி 6 உணவுகளை கட்டாயம் கொடுக்கவும்.
மழைக்காலங்களில் மட்டுமின்றி எப்பொழுதும் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டிலுள்ள உள் வடிகால் அமைப்பு, தோட்டப்பகுதி, கழிப்பறை மற்றும் வீட்டின் மேற்கூரை ஆகியவற்றை அடிக்கடி கவனித்துக் கொள்ளுங்கள். அதனால் ஈரமான மூலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாது. முடிந்தவரை ஈரப்பதத்திலிருந்து விலகி இருங்கள்.
