பிறந்து 10 மாதம் ஆகாத குழந்தை செல்போனில் செய்யும் செயலைப் பாருங்க... நம்பமுடியாத காணொளி
சில வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் செய்வது அதிசயமாக அவதானித்தது போய் தற்போது எந்தவொரு விடயத்தினையும் சர்வசாதாரணமாக செய்து வருகின்றனர். முன்பெல்லாம் நாம் நம் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் விளையாடிக் கொண்டு இருந்தோம். ஆனால் இப்போதையக் குழந்தைகள் சின்னச் சிறு வயதிலேயே செல்போன், லேப்டாப் என பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். பிறந்த குழந்தைகூட செல்போனை பயன்படுத்தத் துவங்கிவிட்டது என பெரியவர்கள் விளையாட்டாகச் சொல்வார்கள்.
ஆனால் அதை நிஜத்திலேயே ஒரு குழந்தை செய்து இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு பிறந்து 10 மாதம் கூட ஆகாத குழந்தை ஒன்று தன் அப்பா அடிக்கடி போன் பேசுவதைப் பார்த்து தனது கையில் அப்பாவின் செல்போனை கொடுத்தவுடன் அவரைப் போலவே காதில் வைத்துக்கொண்டு மழலை மொழியில் குழந்தை ரொம்பவே ஸ்வீட்டாகப் பேசுகிறது. குழந்தை செல்போனில் மழலை மொழியில் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.