சீரியலில் குழந்தையாக நடித்த பெண் எப்படி வளர்ந்துட்டாங்க? கதறலுக்கு காரணம் என்ன?
சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த பேபி கிருத்திகா வெளியிட்ட காணொளி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
பேபி கிருத்திகா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலில் சக்தி என்ற குழநதையாக நடித்தவர் தான் பேபி கிருத்திகா. இந்த சீரியலில் இவரது நடிப்புத் திறமை வேற லெவல் என்றே கூறலாம்.
குறித்த சீரியலின் கதையில் பெண் குழந்தையாக இருந்தால் பாதுகாப்பு இல்லை என்று இதில் ஆண் குழந்தை போன்று வேடமிட்டு நடித்திருப்பார்.
இவரின் எதார்த்தமான நடிப்பு, பாவமான பார்வை, பரிதாபமான ரியாக்ஷன் என அனைத்தும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது.
மௌனராகம் சீரியல் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் குழந்தையாக நடித்த கிருத்திகா தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துள்ளார்.
மேலும் இவர் அச்சு அசல் கோவை சரளா போன்று வசனத்தை பேசி, நடிப்பிலும் அசத்தியுள்ளார். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.