என்னை 57 வயது கிழவன் என்று தப்பு தப்பா பேசுறாங்க... - நடிகர் பப்லு உருக்கம்
என்னை 57 வயது கிழவன் என்று என்னை தப்பு தப்பா பேசுறாங்க என்று நடிகர் பப்லு உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் பப்லு பிரித்திவிராஜ்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பப்லு என்ற பிரித்திவிராஜ். இவர் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்திருக்கிறார்.
பப்லு வானமே எல்லை, பாண்டிநாட்டு தங்கம், உட்பட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 25 வயதில் அஹத் என்ற மகன் உள்ளார்.
தற்போது பப்லுவிற்கு 57 வயது ஆகிறது. ஆனால், பப்லு 25 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் இவர் இருவரையும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதைப் பார்த்த நெட்டிசன்கள் கண்டமேனிக்கு இவர்களை கலாய்த்து வருகின்றனர்.
உருக்கமாக பேசிய பப்லு
இந்நிலையில், ஒரு சேனலுக்கு பப்லு பேட்டி கொடுக்கும்போது ரொம்ப உருக்கமாக பேசியுள்ளார். அப்போது அவர் பேசுகையில், என்னை வயசான ஒரு கிழவனாக்கி, அதை குறித்து எல்லா சேனல்களிலும் பேசுவார்கள்.
இந்த ட்ரோல் எல்லாம் எனக்கு பழக்கம். என் மனைவிக்கு அது ரொம்ப புதுசா இருந்தது. ரொம்ப சீக்கிரமா எங்கள் இருவருக்கும் என்ன புரிந்தது என்றால், ஒருத்தர் எங்களை குறித்து ஒரு தவறான கருத்து ரீல் பார்த்தோ அல்லது எங்கள் நடனத்தை பார்த்தோ எழுதினார்கள் என்றால் அது அவங்களுடைய மனநிலை.
சில பாதி கிளாஸில் தண்ணீர் இருந்தால், ஏன் பாதி கிளாஸில் தண்ணீர் இருக்கிறது என்று சொல்வார்கள். இதெல்லாம் அவருடைய கண்ணோட்டம் என்று உருக்கமாக பேசினார்.