பப்லுவின் முன்னாள் காதலி ஷீத்தலுக்கு திருமணம் முடிந்ததா? மாப்பிள்ளை யார்ன்னு பாருங்க
நடிகர் பப்லூ பிருத்வீராஜின் முன்னாள் காதலி ஷீத்தல் தனக்கு திருமணம் முடிந்துள்ளதாக புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை காதலித்து வந்த நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ் மற்றும் ஷீத்தலின் பிரிவு குறித்த விடயங்கள் அனைவரும் அறிந்ததே.
நடிகர் பப்லூ பிருத்வீராஜ்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான பப்லூ பிருத்வீராஜ், ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வந்தார்.
ஹீரோவாக இருந்த அவர், தற்போது குணச்சித்திர நடிகராக மாறியுள்ளார். தற்போது அவர், பல நல்ல படங்களில் நடித்து வருகின்றார்.
57 வயதை கடந்துவிட்டபோதும் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் ரசிகர்கள் கவர்ந்தவர் அவர். இந்நிலையில் இவ்வாண்டு துவக்கத்தில் நடிகர் பப்லூ, திடீரென தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார், காரணம் அவர் தன்னை விட 30 வயது குறைவான ஷீத்தல் என்ற பெண்ணுடன் Live in Relationship இல் இருந்தமையே காரணம்.
இதைத்தொடர்ந்து, திடீரென இருவரும் பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. அதோடு ஷீத்தல் மற்றும் பிரிதிவிராஜ் இருவரும் சோசியல் மீடியாவில் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் ஷீத்தல் நீக்கியிருந்தார்.
இதை பார்த்த பலரும், இவர்கள் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி எழுப்பினார்கள். இது குறித்து பப்லூசரியான பதிலை குறிப்பிடவில்லை.
ஆனால், ஷீத்தல் இருவரும் பிரிந்து விட்டோம், பப்லு கொடுத்த அனைத்து பொருட்கள் பரிசு என அனைத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என நேர்காணல்களில் தெரிவித்தார்.
ஷீத்தல் திருமணம்
இந்நிலையில் ஷீத்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் தனது திருமண புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சுமேஷ் சோமசேகரன் என்பவரை ஷீத்தல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.ஷீத்தலின் கணவர் சுமேஷ் ஒரு தடகள வீரர் ஆவார், இவர் ஜீம்மில் பயிற்சியாளராக இருக்கிறார்.
அவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்களின் உடலமைப்பு ரவிவாஸ் கிளாசிக்கில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |