எங்கள் உறவு நினைத்தபடி இல்லை... அதனால் பிரிந்துவிட்டோம்! பப்லு காதலி வெளியிட்ட உண்மை
ஷீத்தல் நடிகர் பப்லு பிருத்விராஜை பிரிந்ததற்கு காரணம் என்ன என்பதை பல மாதங்களுக்கு பின்பு உடைத்துள்ளார்.
நடிகர் பப்லு பிருத்விராஜ்
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள பப்லு 23 வயதான ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து வந்ததுடன், இருவரும் ஒரு வீட்டில் வசித்தும் வந்தனர்.
57 வயதாகும் பப்லு ஏற்கனவே பீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததோடு, இவர்களுக்கு ஆர்டிசம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருக்கின்றார்.
இந்த தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காதல் மனைவியை பிரிந்ததுடன், தற்போது 25 வயது மகனை பராமரித்து அவ்வப்போது காணொளி வெளியிட்டு வந்தார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கால் பதித்த இவர் பல வெற்றி சீரியல்களில் நடித்து பிரபலமானார். ஷீத்தல் என்கிற 23 வயது மலேசிய பெண்ணுடன் நெருக்கமாக பழகியதுடன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
பின்பு இருவரும் பிரிந்ததுடன், இதற்கான காரணம் எதையும் பிருத்வி வெளியே கூறாமல், இது தனது தனிப்பட்ட வாழ்க்கை என்று கூறி நெட்டிசன்களை வாயடைத்தார்.
ஷீத்தல் கொடுத்த பதில்
ஷீத்தல் பிருத்வியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், காணொளி இவற்றினை நீக்கி இருவரின் பிரிவை உறுதி செய்த ஷீத்தல் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார்.
தற்போது முதன்முறையாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பப்லு உடனான பிரிவு குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
அதில், “எனது கடந்த கால வாழ்க்கை பற்றி நிறைய பேர் என்னிடம் கேட்கிறீர்கள். பிருத்வியும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது அனைவருக்கு தெரியும்.
நாங்கள் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தோம். நாங்க நினைத்தபடி எங்களது உறவு இருக்கவில்லை. அதனால் தற்போது நாங்கள் பிரிந்திருக்கிறோம்.
இதனை கடந்து செல்ல வேண்டிய நேரம் இது. அதனால் எங்கள் முடிவுக்கு அனைவரும் மதிப்பளிப்பீர்கள் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |