குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கலுக்கான தீர்வுகள்
நாம் உட்கொள்ளும் உணவானது சில காரணங்களால் மலக்குடலில் தங்கிவிடுவதால் மலம் கழிக்கும் போது, மலம் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்த கடினமான நிலையையே மலச்சிக்கல் என்கிறோம், இதுவும் ஓர் உடல் உபாதை தான்.
பெரியவர்களுக்கே இது கடினமாக இருக்கும் என்றால், குழந்தைகளின் நிலையை சொல்லிப் புரியவைக்க வேண்டியதில்லை.
மலச்சிக்கல் இல்லாமல் இருந்தாலே குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
பிறந்ததில் இருந்து முதல் ஆறு மாதங்கள் வரை குழந்தைகள் தாய்ப்பால் மட்டுமே அருந்துவதால் மலச்சிக்கல் வராது.
திட, திரவ உணவுகளை தொடங்கும் போது மலச்சிக்கல் தொந்தரவுகள் வரலாம். இதற்கான தீர்வுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி கண்டறியலாம்?
தொடர்ச்சியாக 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் மலம் கழிக்காமல் இருந்தாலோ, மலம் கழிக்கும் போது வலியுடன் அழுதாலோ, ரத்தத்துடன் மலம் வந்தாலோ, அடிவயிற்றில் வலி இருந்தாலோ மலச்சிக்கல் இருப்பதாக அர்த்தம்.
எப்படி சரிசெய்யலாம்?
முதலில் குழந்தைகளுக்கு தண்ணீர் அதிகம் கொடுத்து பழகவும், நார்ச்சத்து, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்கவும்.
பற்கள் முளைத்த குழந்தையாயின் நன்றாக மென்று சாப்பிடச் சொல்லுங்கள்.
* குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுக்கலாம், வாழைப்பழத்தை நன்கு மசித்து குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.
* 5 முதல் 10 உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்ளுங்கள், முதல் நாள் இரவே அதனை ஊறவைத்துவிட்டு மறுநாள் காலை வெறும் வயிற்றில் தண்ணீரை குடிக்க கொடுக்கலாம், ஊறிப்போன உலர் திராட்சையையும் மசித்துவிடலாம்.
* கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சாறு எடுத்துக்கொள்ளலாம், இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம், நார்ச்சத்து மிகுந்த இந்த பானம் மலச்சிக்கலை சரிசெய்யும்.