பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு 8 வயது சிறுவன் அனுப்பிய கடிதம்! அதற்கு அவர் கொடுத்த பதிலை பாருங்க
நடந்து முடிந்த டி20 உலககோப்பை போட்டியில், ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று டி20-யின் முதல் கோப்பையை வென்றது.
ஆனால், டி20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணி தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணியுடம் தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு 8 வயது சிறுவன் ஒருவன் கடிதம் எழுதியுள்ளான். அந்த கடிதத்தில் நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
நான் உங்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். அனைவரும் நன்றாக விளையாடினர்கள். அரையிறுதியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உணர்ந்தேன் என்று குறிப்பிட்டு, உங்கள் அனைவரின் ஆட்டோகிராப் போட்ட பேப்பர் எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? என எழுதி அனுப்பி இருக்கிறார்.
இதனைக்கண்ட பாபர் அசாம், உங்கள் அன்பான கடிதத்திற்கு நன்றி. உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் எங்களின் ஆட்டோகிராப்பை பெறுவீர்கள்.
மேலும், வருங்கால கேப்டன் உங்களது ஆட்டோகிராப் பெற நான் காத்திருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
From a future captain to current captain @babarazam258 I hope Babar Azam sends this 8-year old all the signatures ?@TheRealPCB @TheRealPCBMedia pic.twitter.com/jwociYh3Kb
— Alina Shigri (@alinashigri) November 13, 2021