பல வருச வலிக்கு மருந்து.... பாகிஸ்தான் வெற்றி பெற்ற போது கதறி கதறி அழுத நபர்! தீயாய் பரவும் வீடியோ
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
துபாய் மைதானத்தில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது.
This is Babar Azam’s father. So happy for him. I first met him in 2012 at Adnan Akmal’s walima. Babar at that time was 3 years away from Pakistan debut. I clearly remember what his father told me “bas debut ho jane do. Agay sara maidaan babar ka hai” pic.twitter.com/ZlsvODQkSg
— Mazher Arshad (@MazherArshad) October 24, 2021
இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 17.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த நபர் வேறு யாரும் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் தந்தை சித்திக் என்பதும் குறிப்பிடத்தக்கது.