விரைவில் நடக்கப்போகும் பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள் - என்ன ஆபத்து?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும், அவர்களில் பெரும் புகழ்பெற்றவர் பாபா வங்கா. பல்கேரியாவைச் சேர்ந்த இவர், தனது அதிசயமான கணிப்புகளால் உலகளவில் பெயர் பெற்றுள்ளார்.
பாபா வங்கா, 12வது வயதில் பார்வை இழந்ததற்குப் பிறகு, எதிர்காலத்தைப் பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் தனது வாழ்க்கை முழுவதும் பல முக்கியமான உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து, எழுதிக் குறிப்பாக வைத்துள்ளார். அதிகம் பேசப்படுவது என்னவென்றால், அவர் கணித்த பல நிகழ்வுகள் ஆண்டாண்டு கடந்தும் உண்மையாக நடந்துள்ளன.
உலக அரசியல், இயற்கை பேரழிவுகள், விஞ்ஞான வளர்ச்சிகள் உள்ளிட்ட பல துறைகளில் அவரது கணிப்புகள் பல முறை சரியாகியுள்ளது. அந்த வகையில் சில அழிவுகள் விரைவில் நடக்கும் என கூறியுள்ளார் அதை பதிவில் பார்க்கலாம்.
பாபா வங்கா கணிப்புகள்
அவர் அன்றே கணித்துள்ளபடி ஒரு அசாதாரண வால்மீன் நமது சூரிய மண்டலத்தின் வழியாகச் செல்வது குறித்து நாசா வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பூமியில் விண்கலம் நுழையும் போது வேற்றுக்கிரக வாசியியுடன் மனிதர்களுக்கு தொடர்பு வரும்.
நாசாவின் அறிக்கை - கடந்த ஜூலை 1 ஆம் தேதி நாசா வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை 1 ஆம் தேதி, சிலியின் ரியோ ஹர்டாடோவில் உள்ள நாசாவின் நிதியுதவி பெற்ற ATLAS (Asteroid Terrestrial-impact Last Alert System) கணக்கெடுப்பு தொலைநோக்கி, விண்மீன்களுக்கு இடையேயான விண்வெளியில் இருந்து தோன்றிய ஒரு வால்மீனைப் பற்றிய கணிப்புகளை முதன்முதலில் அறிவித்தது.
Sagittarius விண்மீன் கூட்டத்தின் திசையிலிருந்து வந்த இந்த விண்மீன்களுக்கு இடையேயான வால்மீன் அதிகாரப்பூர்வமாக 3I/ATLAS என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது தற்போது இது சுமார் 420 மில்லியன் மைல்கள் (670 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் அமைந்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. இது பாபா வங்காவின் கணிப்பில் இடம்பெற்றுள்ளது.
இயற்கை பேரழிவுகள் - பாபா வங்கா கணித்துள்ளதன்படி இயற்கை அழிவு மிகவும் பெரிதான பேரழிவாக வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. சில பகுதிகளில் பூகம்பம் வரும் என்றும் எரிமலை வெடிப்புகள் வரும் எனவும் கணித்திருந்தார்.
மூன்றாம் உலகப் போர் - 2026 இல் மிகப்பெரிய போர்கள் இடம்பெறும் என்றும் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று பாபா வங்கா கணயித்துள்ளார்.
அவரது கணிப்புகளின்படி, தைவானை சீனா கைப்பற்றுவதும் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலும் போருக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணிகளாக இருக்கலாம்.
AI ஆதிக்கம் - பாபா வாங்காவின் கூற்றுப்படி, 2026 செயற்கை நுண்ணறிவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கலாம்.
இயந்திரங்கள் மிகப்பெரிய முக்கிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கும், இது அதிகளவிலான மக்களுக்கு வேலையின்மை, பிரச்சனைகளை கொண்டு வரும். வேலை இன்மை வந்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பாபா வங்காவின் இந்த கணிப்புக்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |