பாபா வங்கா இதையுமா கணித்தாரா? உலகே அழிய போகுதாம்- அச்சம் கொள்ளும் மக்கள்!
“பாபா வாங்கா” என அழைக்கப்படும் வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா கடந்த 1911 இல் பல்கேரியாவில் பிறந்தார்.
இவர், ஒரு கிராமப்புற குடும்பத்தில் வளர்க்கப்பட்ட குழந்தையாக இருந்தபோது இயற்கை சீற்றத்தால் பார்வையை இழந்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கும் திறன் கிடைத்துள்ளது. இயற்கை பேரழிவுகள், அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய மோதல்களை முன்னறிவிக்கும் பாபா வாங்கா, "பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்" என்ற பெயரிலும் அழைக்கப்பட்டார்.
ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போதும் பெரும்பாலான மக்கள் பாபா வாங்காவின் கணிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். ஏனெனின் பாபா வாங்காவின் பல கணிப்புகள் பலித்துள்ளது.
அந்த வகையில் எதிர்வரும் 2123 ஆம் ஆண்டில், அதாவது இப்போதிருந்து 98 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாடுகளுக்கிடையில் பாரிய போர் நடக்கும். அப்போது வேறு என்னென்ன நடக்கும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
98 ஆண்டுகளில் நடக்கப்போவது என்ன?
பாபா வாங்கா கணிப்பின்படி, எதிர்வரும் 2123 ஆம் ஆண்டு நாடுகளுக்கிடையில் பாரிய போர் நடக்கும். அப்போது நாட்டு மக்களுக்கு உணவு, நீர், உறைவிடம் ஆகிய அத்தியாவசிய தேவைகள் கூட செய்ய முடியாத நிலை ஏற்படும். பற்றாக்குறையால் சிறிய நாடுகள் மற்ற சிறிய நாடுகளுக்கு எதிராக போரை அறிவிக்கும்.
இருப்பினும், இந்த கணிப்புகள் எவ்வளவு உண்மை என்பதற்கு காலம் மட்டுமே பதிலாக இருக்கும்.
தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழல் இந்த கணிப்பு பலிக்க அதிக வாய்ப்புள்ளது என நினைக்க வைக்கிறது.
வைரஸ் தொற்று ஏற்படும்
அதே போன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும் பாபா வாங்கா கணிப்பில் மனிதர்களின் ஆயுட்காலம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன்படி, இன்றிலிருந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது எதிர்வரும் 2088 ஆம் ஆண்டில், பூமியில் ஒரு அறியப்படாத வைரஸ் பரவும் இதனால் மனிதர்கள் விரைவாக வயதாகத் தொடங்குவார்கள்.
வயது மூப்பு காரணமாக மனிதர்களின் இறப்பு வீதம் அதிகரிக்கும். அடுத்த 6 தசாப்தங்களுக்குப் பிறகு முதுமை பற்றிய பாபா வாங்காவின் கணிப்பு உண்மையாக வாய்ப்பு உள்ளதா? என்ற சந்தேகம் நம்மிள் பலருக்கும் இருக்கும்.
தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவு முறை, மற்றும் வாழ்க்கை முறை வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொற்றுக்களை பரவச் செய்யும். இதுவே மனிதர்கள் அழிவதற்கு முக்கிய காரணமாக அமையும் வாய்ப்பு உள்ளது.
இனி மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது பற்றிய கணிப்பு பலிக்குமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).