பாபா வாங்கா ஓவர்டேக் செய்த கணிப்பு.. பேரழிவு அச்சத்தில் 44 நாடுகள்- இதுவும் நடக்குமா?
உலகில் பல தீர்க்கதரிசிகள் இருந்தாலும் பாபா வாங்காவின் கணிப்புக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
அவரது கணிப்புகளில் பல உண்மையாகியுள்ளன. இதனால் மக்கள் பாபா வாங்காவின் கணிப்பக்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். இதுவரை அவருடைய பல கணிப்புகள் உண்மையாகி உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பல்கேரியாவை பிறப்பிடமாக கொண்ட பாபா வங்கா, தன்னுடைய 12 வயதில் பார்வையை இழந்தார். பார்வை இழந்த பின்னரும் எதிர்காலத்தை கச்சிதமாக கணிக்கும் சக்தி இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்னர் எதிர்காலத்தில் நடக்கப்போகும் அழிவுகள் பற்றி கூறியுள்ளார்.
அவரை போன்று தீர்க்கதரிசனங்களை ஜப்பானிய பெண்ணொருவர் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அவரின் கணிப்புக்கள் கடந்த சில வருடங்களாக பலித்து வருவதால் அவர் புதிய பாபா வாங்காவாக பார்க்கப்படுகிறார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் 44 நாடுகள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சுனாமி பற்றிய கணிப்பு
கடந்த சில நாட்களாக ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் 44 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானிய பாபா வாங்கா என கூறப்படும் மங்கா கலைஞரும் தீர்க்கதரிசியுமான “ரியோ டாட்சுகி” பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட கணிப்பில் இந்த பேரழிவு பற்றி கூறியிருக்கிறார்.
சுனாமி அதிர்வு
ஜப்பானின் ஹொக்கைடோ தீவு வரை சுனாமி பேரலைகள் ஏற்படுத்திய கம்சட்கா பூகம்பம், கடந்த 1999 ஆம் ஆண்டு ரியோ டாட்சுகியால் வெளியிடப்பட்ட வாட்டாஷி கா மிதா மிராய் (நான் பார்த்த எதிர்காலம்) என்ற கணிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ரியோ டாட்சுகி கருத்து
ரியோ டாட்சுகியின் ஜூலை மாத தீர்க்கதரிசனங்கள் ஏமாற்று வேலை என்று கூறப்பட்டு வேளையில், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்தோனேசியா, ஜப்பான் முதல் ஆஸ்திரேலியா உட்பட 44 நாடுகள் அச்சத்தில் உள்ளன.
கடந்த கால கணிப்புகள்
1. இளவரசி டயானாவின் மரணம்.
2. பாடகி ஃப்ரெடி மெர்குரியின் மரணம்
3. கடந்த 2020 களில் COVID-19 போன்ற ஒரு உலகளாவிய நோய் பரவல்.
கணிப்பின் விளைவுகள்
ரியோ தட்சுகியின் கணிப்பின்படி, ஜப்பானில் விமான முன்பதிவுகளில் 83 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. வரவிருக்கும் பேரழிவு குறித்த அச்சம் காரணமாக கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு பயணம் செய்வதை குறைத்துள்ளனர்.
ப்ளூம்பெர்க் அறிக்கையின் படி, ஹாங்காங்கிலிருந்து சராசரி முன்பதிவுகள் இந்த ஆண்டு 50 சதவீதம் குறைந்துள்ளன. ஜூன் மாத இறுதிக்கும் ஜூலை மாத தொடக்கத்திற்கும் இடையிலான முன்பதிவுகள் 83 சதவீதம் வரை சரிவை ஏற்படுத்தியுள்ளன.
ஏப்ரல்-மே மாத விடுமுறை காலத்தின் போது ஜப்பானுக்கான முன்பதிவுகளில் 50 சதவீதம் குறைந்துள்ளது என ஹாங்காங்கில் உள்ள ஒரு பயண நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்னும் பல பயணிகள் ஏற்கனவே உள்ள கோடைகால முன்பதிவுகள் செய்திருந்ததை ரத்து செய்துள்ளனர்.
ரியோ தட்சுகியின் கணிப்பு தான் இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது. ரியோ தட்சுகியின் கணிப்புகளை புறக்கணிக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும், இது போன்ற கணிப்புகள் சமூக வலைத்தளங்களில் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத வதந்திகளாக இருப்பதால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுவதாக மியாகி மாகாண ஆளுநர் யோஷிஹிரோ முராய் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |