ஈஸ்வரி பாட்டியை தொலைத்து விட்டு ஆட்டம் போட்ட இனியா.. எந்த ஒரு ஆனந்தம் பாருங்க!
ஈஸ்வரி பாட்டியை காட்டில் தொலைத்து விட்டு வீட்டில் குதூகலமாக ஆட்டம் போடும் பாக்கியலட்சுமி சீரியல் இனியாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து பாக்கியா இனியாவை கேரளாவிற்கு ஈஸ்வரியின் உதவியுடன் அழைத்து சென்றுள்ளார்.
குதூகலமாக ஆட்டம் போடும் இனியா
இந்த நிலையில் பாக்கியாவின் பொண்ணாக சீரியலில் நடித்து வரும் இனியா சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
அந்த வகையில், கேரளாவில் ஈஸ்வரி பாட்டியை தொலைத்து விட்டு தற்போது குதூகலமாக ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டுள்ளார்.
காட்சியை பார்த்த சீரியல் ரசிகர்கள்,“ சீரியலில் கவலையாக இருந்து விட்டு தற்போது மாஸாக ரீல்ஸ் போடுறீங்களே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
இனியாவின் இது போன்ற நடவடிக்கைகளில் அவரை அடுத்த வாழ்க்கைக்கு கொண்டு செல்லும் என இனியா ரசிகர்கள் நேர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |