பாக்கியலட்சுமி செல்வி வீட்டில் விஷேசம்.. கையில் வைத்திருப்பது யார் குழந்தை தெரியுமா?
பாக்கியலட்சுமி செல்வி வீட்டு விஷேச புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலை பிரபல இயக்குனர் டேவிட் இயக்கி வருவதோடு இதில் முன்னணி கதாபாத்திரமாக நடிகை சுசித்ரா நடித்து வருகின்றார்.
பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் கேரளாவில் டூர் முடித்து பாக்கியாவுடன் செல்வி வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் செழியன் ஐஸ்வர்யாவுடன் இருப்பது பாக்கியாவிற்கு தெரிய வருவது போல் கதைக்களம் நகர்த்தப்பட்டு வருகின்றது.
மீனாவின் கையிலுள்ள குழந்தை
சீரியலிலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் செல்வி என்கிற மீனா அவரின் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் தன்னுடைய மகனின் குழந்தையை கையில் ஏந்தியவாறு இருக்கிறார். இது குறித்து அவர் பதிவிடுகையில் “ தன்னுடைய பேரபிள்ளைக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது ” என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இந்த பதிவிற்கு பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதுடன் குழந்தையின் பெயர் தொடர்பில் கேள்வியெழுப்பி வருகின்றார்கள்.
அத்துடன் மகனின் திருமண புகைப்படங்கள் வெளியாகி கொஞ்ச நாளில் எப்படி குழந்தை எனவும் வினவி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |