அமிர்தாவை நெருங்கிய கணேஷ்! குழந்தையை பார்க்க வந்த ராதிகா.. அதிர்ச்சியில் மாலினி
பாக்கியலட்சுமி சீரியல் தனித்தனியாக மூன்று கதைகள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் செல்லும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் அமிர்தாவின் கணவர் அமிர்தாவும் குழந்தையும் எங்கு இருக்கிறார் என ஐடியை வைத்து தேடிக் கொண்டு சென்னை வந்துள்ளார்.
ஐடியை வைத்து அமிர்தாவின் நண்பியை கண்டுபிடித்து அமிர்தாவை பற்றி விசாரிக்கிறார்.
ஆனால் அமிர்தா பற்றிய தகவல் தெரியாது என நண்பி கூற அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
பின்னர் செழியனுக்கு குழந்தை பிறந்துள்ள காரணத்தினால் வீட்டிலுள்ளவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் கோபியும் குழந்தையை பார்க்க வந்திருக்கிறார். அப்போது ராதிகா குழந்தையை பார்க்க வருகிறார்.
அதிர்ச்சியில் மாலினி
அவர் கதவை திறக்கும் போது கோபி - பாக்கியாவின் பக்கத்தில் நிற்கிறார். இதனை பார்த்து ராதிகா கடுப்பாகியதுடன் பேசாமல் கோபியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார்.
இது ஒரு புறம் இருக்கையில், ஐஸ்வர்யா செழியனுக்கு தொடர்ந்து கோல் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் செழியன் குழந்தை பிறந்த சந்தோசத்தில் கோலை கட் செய்து விடுகிறார்.
கடுப்பான மாலினி கோலை எடுக்காவிட்டால் கையை அறுத்து கொள்ளப் போவதாக கூறுகிறார்.
பயந்து கோல் செய்த செழியன் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக கூறுகிறார். இந்த விடயம் கேட்டு மாலினி அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இனி செழியன் குழந்தையுடன் இருக்க போகிறார் மாலினின் அடுத்த கட்ட முயற்சி என்ன? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.