நடுசாமத்தில் மாலினியுடன் மாட்டிய செழியன்.. பார்த்த அதிர்ச்சியில் வாயடைச்சி போன பாக்கியா!
நடுசாமத்தில் மாலினியுடன் மாட்டிய செழியனை பார்த்து பாக்கியா அதிர்ச்சியடைந்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இன்றைய தினம் எபிசோட்டில் வீட்டில் கணேசன் அப்பா, அம்மா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அமிர்தாவின் அம்மா வருகிறார்.
இருவரையும் பார்த்து “ என்னுடைய பெண்ணை தயவு செய்துவிட்டு விடுங்கள் அவள் இப்போது தான் சந்தோசமாக வாழ ஆரம்பித்து இருக்கிறாள்.
மீண்டும் அவள் வாழ்க்கையை வீணாக்க வேண்டாம்.” என அழுது கொண்டே பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து இப்போது தான் நிலா எழிலை அப்பா என கூப்பிட ஆரம்பித்து இருக்கிறாள். அவளிடம் சென்று உன் அப்பா வேறு என எப்படி கூற முடியும்.” என்கிறார்.
வசமாக சிக்கிய மாலினி- செழியன்
இது ஒரு புறம் இருக்கையில் பாக்கியாவின் வீட்டிற்குள் வந்து மாலினியின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஜெனியிடம் குழந்தையை வாங்கிக் கொண்டு போய் மேல் மாடியில் உள்ள அறையில் மறைத்து வைத்துள்ளார்.
பின்னர் வீட்டிலுள்ள அணைவரையும் அலைய விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.
கடைசியாக குழந்தையை மேல் மாடியிலிருந்து எடுத்து வந்து அனைவருக்கும் சப்ரைஸ் கொடுத்துள்ளார். மாலினியின் செயலால் வீட்டிலுள்ள அனைவரும் கடுப்பாகியுள்ளனர்.
இதனை பொறுத்து கொள்ள முடியாத பாக்கியா,“ இனி வீட்டிற்கு வர வேண்டாம்.. வெளியே போ...” என விரட்டியுள்ளார். அத்துடன் செழியனை விடாமல் துரத்திக் கொண்டு மாலினியும் கோல் செய்து கொண்டிருக்கிறார்.
நடுசாமத்தில் வீட்டிற்கு வெளியே வந்து கோல் பேசும் போது வசமாக பாக்கியாவிடம் மாட்டி கொள்கிறார். ஆனால் அந்த கோல் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் பாக்கியாவின் சந்தேகம் அதிகமாகியுள்ளது.
எங்கு கோபி போல் இவரும் நடந்து கொள்வாரோ என பயம் பாக்கியலட்சுமி ரசிகர்களுக்கு வந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |