பாக்கியாவுக்கு வந்த சிக்கல்.. இனி ஜெனி, ராதிகாவால் வரபோகும் பிரச்சனை
பாக்கியலட்சுமி சீரியலில் இனி வரும் எபிசோடுகளில் அடுத்தடுத்து பிரச்சினைகளை பாக்கியா சந்திக்க உள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
கடந்த வாரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி சீரியலின் மகா சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு பாக்கியா திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனால் பாக்கியா மீது ராதிகா பயங்கர கடுப்பில் காணப்படுகின்றார். மீண்டும் பழைய மாதிரி வில்லியாக மாறிவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மற்றொரு புறம் ஜெனி, செழியன் வாழ்க்கை, எழில் அமிர்தா வாழ்க்கையில் இடையூறாக கணேஷ் என அடுத்தடுத்து பிரச்சினைகள் அரங்கேற உள்ளது.
செழியன் மனதில் கோபி பாக்கியாவைக் குறித்து விஷத்தை கலந்து வருகின்றார். இவை அனைத்தையும் சிங்கப்பெண்ணாக பாக்கியா எவ்வாறு கடந்து வர உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |