பாக்கியாவிடம் பொய் கூறி மழுப்பும் செழியன்.. உண்மை விஷயம் தெரிந்தால் என்ன ஆவது?
பாக்கியலட்சுமியில் சீரியலில் மகன்களின் வாழ்க்கை காப்பாற்றுவதற்காக அம்மாவின் தவிப்பை கதைக்களமாக கொண்டு சீரியல் நகர்த்தப்படுகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் கணவனுடன் விவாகரத்து பெண்ணொருவர் சமூகத்தில் தனியாக இருந்து தன்னுடைய மகன்கள் மற்றும் மாமனார், மாமியாரையும் காப்பாற்றும் கேரக்டரில் பாக்கியாவாக சுசித்ரா நடித்துள்ளார்.
மேலும் இந்தத் தொடரின் கோபி, ராதிகா உள்ளிட்ட லீட் கேரக்டர்களும் தொடரின் சுவாரஸ்யங்களை கூட்டும்வகையில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாக்கியாவின் மகன்கள் எழில் மற்றும் செழியன் இருவரின் வாழ்க்கையிலும் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியில் மாட்டிய பாக்கியா
இதிலிருந்து மகன்களையும் மருமகள்களையும் எப்படி மீட்க போகிறார் என்பதனை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் அமிர்தாவையும் குழந்தையும் விட்டு கொடுக்க முடியாது என கணேஷ் ஒரு பக்கம் பிடிவாதமாக இருக்கிறார்.
பாக்கியா எவ்வளவு பேசினாலும் அதற்கு மதிப்பு கொடுக்காமல் அவருடைய மனைவியை மீட்டுக் கொள்வேன் என உறுதியாக இருக்கிறார்.
இது ஒரும் புறம் இருக்கையில், செழியனை மிரட்டி மாலினி அவரை தன் வசப்படுவதற்கு பாரிய முயற்சி செய்து வருகிறார்.
இது குறித்து செழியனிடம் கேட்ட போது, அவர் பார்க்க வரவில்லையென்றால் செத்து விடுவேன்..” என மிரட்டுகிறார் என கதையை மாற்றிக் கூறுகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |