சீரியலில் சிம்பிளாக என்ரி கொடுத்த சித்தார்த்: செழியனின் ரகசிய உறவை அறியும் பாக்யா! பரபரப்பான ப்ரோமோ
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பம் மற்றொரு பக்கம் சீரியலில் நடிகர் சித்தார்த் வந்த ப்ரோமோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் கல்வியிலும் தன்னால் ஈடு கொடுத்து வெற்றி பெற முடியும் என கெத்து காட்டி வருகிறார்.
பரபரப்பான காட்சிகள்
இந்நிலையில், இன்று வெளியானப் ப்ரோமோ காட்சியில், நடிகர் சித்தார்த் நிலாவைக் காப்பாற்றும் சிறிய கதாப்பாத்திரத்தில் வந்திருப்பார்.
மற்றொரு பக்கம் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெனிக்கு பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் குடும்பமே கொண்டாட மற்றொரு பக்கம் செழியன் மாலினி ரகசிய உறவை அறியும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை அதீத எதிர்ப்பார்ப்பில் ஆழ்ந்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |