பாக்யாவிற்கு எதிராக கோபி செய்த சதி வேலைகள்... முகத்திற்கு நேராக சவால் விட்டு மாஸ் காட்டும் பாக்யா
பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் குடும்பத்துடன் சேரவும், வீட்டை மீட்டெடுக்கவும் பாக்யாவுடன் சவால் விடுகிறார் கோபியின் காட்சியின் ப்ரோமாவாக வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியல் பிரபல தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி. இது ஒரு இல்லத்தரசியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடராகும்.
இந்த சீரியல் தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்போடு நாளுக்கு நாள் சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்துக் கொண்டிருக்கிறது இந்த தொடர்.
இந்தத் தொடரில் தற்போது பாக்யாவின் நிலைமை அதிரடி காட்டி வரும் பெண் போல காட்டி வருகிறார்கள். கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் கல்வியிலும் தன்னால் ஈடு கொடுத்து வெற்றி பெற முடியும் என கெத்து காட்டி வருகிறார்.
மீண்டும் பாக்யாவுடன் மோதும் கோபி
இந்நிலையில் கோபி பாக்யாவை வீழ்த்துவதற்காக அடுத்தடுத்து பல சதிவேலைகளை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார் கோபி. அப்படி இனியாவுடன் கொடைக்காணலுக்கு சென்று கோபி செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பாக்யா செய்து மீண்டும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார்கள்.
ஆனால் கோபி பாக்யா முன்னேற கூடாது என்றும் எல்லா சிக்கலில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டும் என்று இங்கிருந்து பார்த்த வேலைகளை எல்லாம் முறியடித்து கோபி முகத்திற்கு நேராக சென்று சவால் விடும் காட்சிகள் மாஸாக உள்ளது.