பிக்பாஸ் செல்லும் இனியா.. கண்ணீருடன் வரவேற்ற Housemate.. நடந்தது என்ன?
எழிலை பார்க்க சென்ற இனியாவின் காணொளி சீரியல் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்து கொள்கின்றது.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பாக்கியா, எவ்வளவு குடும்ப தடைகள் வந்தாலும் குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய வாழ்க்கை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார்.
ஆனால் கோபி இவையனைத்தையும் கணக்கெடுக்காமல் இரண்டாவது மனைவி அவரின் குழந்தைகள் என வாழ்ந்து வருகிறார்.
இப்படியொரு சமயத்தில் மீண்டும் கோபி- பாக்கியாவுடன் இணைந்து வாழ வேண்டும் என ஈஸ்வரி ஆசைப்படுகிறார்.
விஷாலை பார்க்க ஓடிய இனியா
இந்த நிலையில் சீரியலில் சின்ன பொண்ணாக ரசிகர்கள் மனதை கவர்ந்த இனியா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நேஹா, பாக்கியலட்சுமி சீரியலில் அண்ணணாக எழில் கதபாத்திரத்தில் நடித்த விஷாலை காண பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சென்றதுடன் அவருக்கு நிறைய நற்செய்திகளையும் கூறி விட்டு வந்திருக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. காணொளியை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |