இனியாவை தொடர்ந்து திருமணம் ரெடியாகும் கோபி மகள்- மணக்கோலத்தில் வெளியான Video
இனியாவை தொடர்ந்து திருமணம் தயாராகும் கோபியின் மகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
பெண்கள் சமூகத்தில் அனுபவிக்கும் வலிகள் மற்றும் மாமியாரின் கொடுமைகள் ஆகியவற்றை கருவாகக் கொண்டு சீரியல் நகர்த்தப்படுகின்றது.
பெத்த மகளின் வாழ்க்கைக்காக தன்னுடைய கனவுகளை தொலைத்த பாக்கியா, தற்போது புதிய ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார்.
இப்படி ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், இனியா தன்னுடைய வாழ்க்கைக்காக அம்மாவின் கனவை கலைத்து விட்டோம் என்ற வருத்தத்தில் அவருடைய வாழ்க்கையை கூட வாழாமல் யோசித்துக் கொண்டிருக்கிறார்.
மயூவுக்கும் திருமணமா?
இந்த நிலையில், கோபியின் இளைய மகள், ராதிகாவின் மகளான மயூரா மணக்கோலத்தில் இருக்கும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவிற்கு மகளாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த மயூ, தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு அந்த சீரியலில் தர்ஷனுடன் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த சீரியலில் மணக்கோலத்தில் இருக்கும் காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “இனியாவை தொடர்ந்து தற்போது இவருக்கு திருமணமா? குழந்தை திருமணம் இது?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
