விபத்தில் சிக்கிய கோபி! கோபி- ராதிகா உறவை தெரிந்து கொண்ட பாக்கியா: பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிற்காக அதிரடி முடிவு ஒன்றினை ராதிகா எடுத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
சீரியல் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.
இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ளதாக எடுக்கப்பட்டுள்ளது. பாக்கியாவிற்கு கோபி செய்யும் துரோகத்தால் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கோபியின் உண்மையான மனைவி பாக்கியா என்பதை அறிந்து கொண்ட ராதிகா அடுத்தடுத்து அதிரடியாக சம்பவங்களை செய்து வந்த நிலையில் தற்பொத வெளியான ப்ரொமொ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மை அறியும் தருணம்
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் கோபி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றார். இதனை கேள்விப்பட்ட பாக்கியா மற்றும் ராதிகா மருத்துவமனைக்கு வந்துள்ள நிலையில், கோபியின் உண்மையான சுயரூபம் பாக்கியாவிற்கு தெரியவந்துள்ளது.