குழந்தையுடன் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் ஈஸ்வரி... உண்மை அறிந்ததும் ஆடிப் போன ஜெனி
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிக்கு தெரியாமல் குழந்தையை தூக்கிக் கொண்டு ஈஸ்வரி குலதெய்வம் கோவிலுக்கு சென்றுள்ள நிலையில் புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.
ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.
தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. இதனை சிறப்பாக செய்து வரும் பாக்கியாவிற்கு அங்கும் இடையூறு அதிகமாகவே வருகின்றது.
ஜெனியின் குழந்தையை உறவினர்கள் வைத்திருக்கையில் ஈஸ்வரியும், செழியனும் வீட்டிற்கு வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு செல்கின்றனர்.
குலதெய்வம் கோவிலுக்கு சென்று குழந்தைக்கு பெயர் வைக்க எடுத்துச் சென்ற நிலையில், வீட்டில் தாத்தா பாக்கியாவிடம் போனில் கூறுகின்றார்.
இதைக் கேட்ட பாக்கியா பெரும் அதிர்ச்சியில் இருக்கும் நிலையில், ஜெனியின் தந்தை, செழியன் மீது பொலிசில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |