Baakiyalakshmi: முடிவடையும் பாக்கியலட்சுமி சீரியல்... வைரலாகும் கோபி உடைத்த உண்மை
பாக்கியலட்சுமி சீரியல் முடிவு குறித்து அதில் கோபியாக நடிக்கும் சதீஷ் வெளியிட்டுள்ள காணொளி அதன் உண்மையை உடைத்துள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் 2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி முதல் தொடங்கியது.
இந்த சீரியலில் சுசீத்ரா ஷெட்டி பாக்கியலட்சுமியாகவும், சதீஷ் குமார் கோபிநாத்தாகவும், ரேஸ்மா பசுபுலேட்டி ராதிகாவாகவும், ராஜலட்சுமி ஈஸ்வரியாகவும், நவீன் பிரின்ஸ், அக்ஷிதா அசோக் என்று ஏரளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
ஒரு குடும்ப தலைவியின் போராட்ட கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் தற்போது ராதிகா நிரந்தரமாக கோபியை விட்டு பிரிந்துள்ளார்.
தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்ததுடன், தனது லட்சியத்திலும் உச்சத்திற்கு வந்துள்ளார் பாக்கியா.
குறித்த சீரியலில் மாமனார் ராமமூர்த்தி இறப்பிற்கு பின்பு முடிவிற்கு வந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், அந்த சம்பவம் முடிந்தும் சீரியல் தொடர்ந்துள்ளது.
எப்பொழுது முடியும்?
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், பாக்கியலட்சுமி என்ற பப்ளிக் எக்ஸாம் முடியும் நேரம் நெருங்கி விட்டது. நான் பாஸா இல்ல பெயிலா என்பது ரசிகர்கள் என்ற உங்கள் கையில் இருக்கிறது. மனதிலும் உள்ளத்திலும் சோர்வடைந்து விட்டேன். இருப்பினும் முயற்சிகள் தொடரும். ஒரு நாள் நல்ல நடிகன் என்ற இலக்கை அடைய இன்னும் என் பயணம் தொடரும்.. நன்றி வாழ்த்துக்கள்" என்று அதில் பகிர்ந்திருக்கிறார்.
இதன் மூலம் பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? அல்லது மேலும் தொடர உள்ளதா என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், கோபி அவ்வப்போது வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, இவர் வெளியிட்ட பதிவுகளால், பாக்யலட்சுமி சீரியலின் முடிவு எந்த மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |