கண்கலங்கிய பாக்கியா.. ரித்தீஷின் மாஸ் என்றி புகைப்படம்- இதெல்லாம் சீரியலுக்காகவா?
பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில எபிசோட்களில் முடிவுக்கு வரும் நிலையில், இனியா கணவர் பொலிஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் இன்னும் சில எபிசோட்களில் நிறைவுக்கு வரவிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்ற செய்தி கடந்த சில வருடங்களாக சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக இருந்தது.
அந்த சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லப்பா என்பது போல தான் கதைக்களம் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் எமது சமூகங்களில் நடக்கும் யதார்த்தமான கதையாக இருந்தது. ஒரு குடும்பத் தலைவி தன்னுடைய குடும்பத்திற்காக படும் அவமானங்கள், உழைப்பு என எல்லாவற்றையும் இந்த சீரியலில் அழகாக காட்டியிருப்பார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய சுய கௌரவத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் போது ஏற்படும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியலில் அழகாக காட்டப்பட்டிருக்கிறது.
மாஸ் என்றி கொடுத்த இனியா கணவர்
இந்த நிலையில், பாக்கியா சீரியல் முடிவுக்கு வருகிறது தொடர்பாக பகிர்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் சீரியலில், இனியாவுக்கு விவாகரத்து வாங்குவதற்காக நீதிமன்றத்தில் நிற்பது போன்ற காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கிறது.
இது ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், இனியாவின் கணவர் ரித்திஷ் மாஸாக பொலிஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “சீரியலில் இவர் பொலிஸாக வருவாரா?” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |