மகள் வயது பெண்ணை திருமணம் செய்த 70 வயது நடிகர்: யார் தெரியுமா?
பாலிவுட் நடிகர் ஒருவர் தனது 74வது வயதில் தன்னைவிட 29 வயது குறைவான இளம்பெண்ணை திருமணம் செய்ததைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் கபீர் பேடி
தமிழ் சினிமாவில் சில பிரபலங்கள் தனது வயதிற்கு மூத்த பெண்களை திருமணம் செய்துள்ளனர். ஆனால் பாலிவுட் நடிகர் ஒருவர் தன்னை விட 29 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
ஆம் பாலிவுட் நடிகர் கபீர் பேடி.யின் திருமண வாழ்க்கை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1971-ல் பாலிவுட்டில் வெளியான 'ஹல்சல்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கபீர் பேடி.
'மெயின் ஹூன் நா' போன்ற திரைப்படங்கள் மூலம் அங்கீகாரம் பெற்ற இவர் ஏராளமான படங்களில் நடித்ததுடன் தற்போது வரை படங்களில் நடித்து ஆக்டிவாகவே இருக்கின்றார்.
ஆனால் இவரது திருமண வாழ்க்கை மட்டும் சர்ச்சை நிறைந்ததாக இருக்கின்றது. நடிகர் கபீர் பேடி 1969ம் ஆண்டு மாடல் மற்றும் நடன கலைஞரான பிரதிமா பேடி என்பவரை காதலித்து பெண் வீட்டு சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணமான அடுத்த வருடமே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட ஆரம்பித்து 1977ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு பூஜா மற்றும் சித்தார்த்த என்று இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் சித்தார்த் உடல்நிலை சரியில்லாமல் 1977ம் ஆண்டு இறந்தார். மகனின் இறப்பு பிரதிமாவை மன அழுத்தத்திற்கு தள்ளியுள்ளது.
தொடர்ந்து பர்வீன் பாபி என்பருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த கபீர் அவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
அமெரிக்காவில் மாடலிங் செய்தபோது கபீர் பேடி, சூசன் ஹம்ப்ரீஸை என்பவரை சந்தித்து காதலித்த நிலையில் 1980ல் திருமணம் செய்து 1990ம் ஆண்டில் இந்த தம்பதி பிரிந்தனர். இவர்களுக்கு ஆடம் பேடி என்ற மகன் உள்ளார்.
1991ம் ஆண்டு தொகுப்பாளர் நிக்கி முல்கவ்கரை சந்தித்து பழகிய நிலையில் 1992ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கபீரை விட நிக்கி 20 வயது குறைவான நிலையில், லண்டனில் வசித்து வருகின்றார்.
பின்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004ல் இருவரும் பிரிந்துள்ளனர். பின்பு லண்டனைச் சேர்ந்த இந்தியாவை பூர்விகமாக கொண்ட பர்வீன் துசாஞ்ச் மீது காதல் கொண்ட கபீர் அவரை 2016ல் திருமணம் செய்தார். 70 வயதாகும் கபீரை விட பர்வீன் 29 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |