பாக்கியாவை பாராட்டி தள்ளும் கோபி.. ராதிகாவை விட்டு சென்றுவிடுவாரா?
கோபிக்கு பாக்கியா உதவி செய்ததால் மனம் மாறி தற்போது மீண்டும் பழைய வாழ்க்கைக்குள் செல்வதற்கு கோபி ஆசைப்படுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியை பார்க்க போன ராதிகாவிடம் கோபி மற்றும் அவரின் குடும்பத்தினர் கோபமாக பேசி அனுப்பி விடுகிறார்கள்.
அதே சமயம், செழியன் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து ஜெனி கேள்வி கேட்கிறார்.
ஆரம்பத்தில் கோபியை பார்ப்பதற்காக பாக்கியா மருத்துவமனைக்கு வரவில்லை. இது குறித்து ஈஸ்வரி கேட்ட போது பாக்கியா, “ அவரின் உயிருக்கு ஆபத்து என்றதும் நான் தான் மருத்துவமனையில் சேர்த்தேன். அத்துடன் என்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி அவரை நான் வந்து பார்க்க மாட்டேன்..” என முகத்திற்கு முகம் கூறி விடுகிறார்.
பின்னர் மருத்துவமனைக்கு அனைவரும் கோபியை அழைக்க சென்ற போது ராதிகாவுடன் செல்ல மாட்டேன், அம்மாவுடன் வீடுக்கு செல்வேன்.. என அடம்பிடித்து பாக்கியாவுடன் பாக்கியா வீட்டிற்கு வந்து விடுகிறார்.
இதனை தொடர்ந்து, ஈஸ்வரி கோபியை பாக்கியாவின் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது செழியனிடம் மருத்துவமனையில் செலவான பணத்தை கொடுக்கிறார். ஆனால் செழியன் அதை வாங்காமல் “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்கிறார்.
அதற்கு ஜெனி,“ எப்படி காசு கொடுப்ப உனக்கு வேலை இல்லையே என்று கேட்க சேவிங்கில் இருக்கிற பணத்தை கொடுப்பேன்..” என்று சொல்கிறார்.
பாக்கியாவுடன் சேர ஆசைப்படும் கோபி
இந்த நிலையில், குணமடைந்து வரும் கோபிக்கு மீண்டும் பாக்கியா மீது காதல் வந்துள்ளது. பாக்கியாவின் வெற்றிக்கு என்ன காரணம் என்று அவரிடம் கேட்டுகிறார்.
அத்துடன் நிறுத்தாமல் பாக்கியா பற்றிய பெறுமைகளை ராதிகாவிடமும் கூறிக் கொண்டிருக்கிறார்.
பழைய வாழ்க்கை மீண்டும் வராதா? என்ற ஏக்கமும் கோபிக்கு இருக்கிறது. தன்னுடைய கணவர் பாக்கியாவுடன் சென்று விடுவாரோ என்ற பயமும் ராதிகாவுக்கு இருக்கிறது.
இனி வரும் எபிசோட்களில் கோபியின் இறுதி முடிவு என்ன? ராதிகாவின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட போகின்றது என்பதனை தொடர்ந்து நாம் எபிசோட்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |