இனியாவை பெண் கேட்டு வந்த சுதாகர்.. திகைத்து போன பாக்கியா- மகளை கட்டிக் கொடுப்பாரா?
இனியாவை வைத்து பாக்கியாவின் ஹோட்டலை கைவசப்படுத்த நினைக்கும் சுதாகருக்கு பாக்கியா என்ன பதிலடிக் கொடுக்கப்போகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
கணவர் இல்லாமல் தனியாக நின்று குடும்பத்தையும் தன்னுடைய கனவுகளையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பதனை கருவாகக் கொண்டே பாக்கியலட்சுமி சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இரண்டு திருமணங்கள் செய்து விட்டு, எதையும் சரியாக பார்த்துக் கொள்ள முடியாத கோபிநாத், தற்போது குடும்பமும் இல்லாமல் அம்மாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பிள்ளைகளுக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்த பாக்கியா, மகன்கள் மற்றும் மருமகள்களுடன் சந்தோஷமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.
சுதாகரின் சூழ்ச்சியில் சிக்குவாரா?
இந்த நிலையில், படிப்பை முடித்து விட்டு ஊடகவியலாளராக பணியாற்றி வரும் இனியாவை பெண் கேட்டு சுதாகர் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார்.
கோபிநாத்தின் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சுதாகர் பாக்கியா வீட்டிற்கு வந்து, “ஓ நீங்களா? நீங்க இனியாவுக்கு யாரு? என கேட்கிறார். அதற்கு பாக்கியா, “நான் தான் இனியாவின் அம்மா..” என்கிறார்.
இவற்றையெல்லாமல் வேலையாள் மூலம் தெரிந்து கொண்ட சுதாகர் குடும்பத்தினர் முன்னாள் எதுவும் தெரியாதது போன்று நடிக்கிறார். பாக்கியாவால் சுதாகரின் சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் உச்சக்கட்ட கடுப்பில் இருந்தாலும், அடுத்த என்ன நடக்கும் என்பதனை பொறுமையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பாக்கியா தன்னுடைய மகளுக்காக ஹோட்டலை விட்டுக் கொடுப்பாரா? என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்படி நடக்கிறது என தெரியாமல் கோபியும், ஈஸ்வரியும் இனியாவின் திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |