கோபியை விட்டு பிரியும் ராதிகா- கதறியழும் இனியா.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் திணறிப்போகும் அளவுக்கு ராதிகா கதையில் ஒரு டுவிஸ்ட் கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் கடந்த 5 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
அதில், நடிகை சுசித்ரா பாக்கியலட்சுமி என்ற லீட் ரோலில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன், ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ரேஷ்மா கோபியின் இரண்டாவது மனைவியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கோபியை இரண்டாவதாக திருமணம் செய்த ராதிகா அவரை திருமணம் செய்த காலம் முதல் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார். அவருக்கும் சீரியலில் மயூ என்ற பெண்பிள்ளையொருவர் இருக்கிறார்.
கோபியை பிரியும் ராதிகா
இந்த நிலையில், கோபிக்காக தனது சொந்த விருப்பு வெறுப்புக்களை விட்டுக் கொடுத்து வாழும் ராதிகா, அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு எடுத்துள்ளார்.
அதாவது, பாக்கியா வீட்டில் 10 நாட்களுக்கு இருப்பதற்கு மாத்திரமே கோபி வாடகை கொடுத்தார். அதனால் ராதிகாவும் அவருடைய மகள் மயூவுடன் வந்து கோபியுடன் பாக்கியா வீட்டில் இருந்தார்கள்.
இருந்தாலும், அவருக்கு நாளுக்கு நாள் கஷ்டங்கள் அதிகரித்து கொண்டே போனது. ஈஸ்வரியும் இனியாவும் பல சந்தர்ப்பங்களில் ராதிகாவை அசிங்கப்படுத்தினார்கள். அவற்றையெல்லாம் கோபிக்காக ராதிகா பொறுத்துக் கொண்டார்.
“10 நாட்கள் முடிந்து விட்டது வாங்க போகலாம்..” என கோபியை அழைத்த போது இனியா அழுது அடம்பிடிக்கிறார். இதனால் மனம் மாறிய ராதிகா, கோபியை அவர் குடும்பத்துடன் விட்டுவிட்டு அவர் தனியாக மயூவுடன் வெளியேறியுள்ளார்.
ராதிகா இப்படி கூறியதும், கோபி உட்பட வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சிடைந்துள்ளனர். ஆனால் ராதிகாவின் மன நிலையை பாக்கியா மாத்திரம் புரிந்து கொள்வது போன்று காட்சிகள் வெளியாகியுள்ளது.
இனி வரும் காலங்களில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |